Connect with us

Raj News Tamil

இவர் தான் விஜயின் அடுத்த இயக்குநர்? அரசியலுக்கு சரியான ஆளு!

சினிமா

இவர் தான் விஜயின் அடுத்த இயக்குநர்? அரசியலுக்கு சரியான ஆளு!

அரசியல் களத்தில் காலெடுத்து வைத்துள்ளதால், இன்னும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று தளபதி விஜய் கூறியுள்ளார்.

இதனால், விஜயின் கடைசி படத்தின் மீது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, எந்த இயக்குநரை விஜய் தேர்வு செய்வார்? எந்த மாதிரியான கதையாக அப்படம் இருக்கும்? என்று பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இவ்வாறு இருக்க, விஜயின் 69-வது படத்தை, இயக்குநர் எச்.வினோத் இயக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. கிட்டதட்ட உறுதி செய்யப்பட்ட இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

தெளிவான அரசியல் அறிவு கொண்ட இயக்குநர் எச்.வினோத், விஜயை வைத்து கடைசி படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top