தமிழக அரசியல் வரலாறு என்பது, கோடம்பாக்கத்தில் இருந்து தான் உருவானது என்று கூறலாம்.
அந்த அளவிற்கு, திரைத்துறையில் ஜொலித்துக் கொண்டிருந்தவர்கள் தான், தமிழக மக்களை பெருமளவில் ஆண்டுள்ளனர்.
அந்த வகையில், நடிகர் விஜயும், தற்போது தமிழக அரசியலில் காலடி எடுத்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளில், முழு வீச்சுடன் அவர் இயங்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் ஆரம்பிக்க உள்ள கட்சியில் பெயர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயரில், கட்சி தொடங்கப்பட உள்ளதாம்.