நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இன்னொரு புறம் படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் வாரிசு படம் இதுவரை ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் பிறகு வாரிசு திரைப்படமும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. தளபதி விஜய் வசூலில் இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Aatanayagan ON DUTY
— Sri Venkateswara Creations (@SVC_official) February 6, 2023#MegaBlockbusterVarisu officially enters the 300Crs worldwide gross collection club now
#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #Varisu#VarisuCrosses300CrsWWGross pic.twitter.com/A4K1yLeD4E