முன்பு கொண்டாட தவறிய திரைப்படங்களையும், பெரிய கொண்டாடப்பட்ட படங்களையும், ரீ ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னர், விஜய், அஜித், ரஜினி, கமல் என்று பல்வேறு நடிகர்களின் திரைப்படங்கள், ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், தற்போது விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று, திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது, 2025-ஆம் ஆண்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி வந்தால், சச்சின் திரைப்படம் ரிலீஸ் ஆகி 20 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
இதனை கொண்டாடும் வகையில், அந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார். இந்த தகவல், விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.