வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கோட் திரைப்படத்தில், தளபதி விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்று, பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஆர்.ஆர்.ஆர். படத்தை தயாரித்த DVV எண்டர்டெயின்மென்ட் தான், விஜயின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாம்.
இந்த படத்திற்காக விஜய்-க்கு ரூபாய் 250 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாம். இந்த தகவலை அறிந்த கோலிவுட் வட்டாரத்தை சேர்ந்தவர்கள், வாயடைத்துப் போயுள்ளார்கள்.
தற்போது நடித்து வரும் தி கோட் படத்திற்காக, 200 கோடி ரூபாய் விஜய் சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.