விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம், கடந்த 5-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களை வழங்கி வந்தனர்.
இருப்பினும், வசூலில் பாதிப்பு அடையாத இந்த திரைப்படம், உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் 9 நாட்கள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.
அதன்படி, 348 கோடி ரூபாயை, 9 நாட்களில், இப்படம் வசூலித்துள்ளதாம். 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், இன்னும் முதலீடு செய்த பணத்தையே வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.