Connect with us

Raj News Tamil

கிடைக்குற கேப்பில் பிரச்சாரமா? விசில் போட வைக்கும் விஜயின் ‘விசில் போடு பாடல்!’

சினிமா

கிடைக்குற கேப்பில் பிரச்சாரமா? விசில் போட வைக்கும் விஜயின் ‘விசில் போடு பாடல்!’

தி கோட் படத்தின் தரமான அப்டேட் ஒன்று வரும் என, இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அது என்ன அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் யோசித்து முடிப்பதற்குள், பர்ஸ்ட் சிங்கில் பாடல் வெளியாக இருப்பது தான் அந்த தரமான அப்டேட் என்று, படக்குழுவினர் கூறிவிட்டனர்.

அவர்கள் கூறியதன்படி, இன்று தி கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கில் வெளியாகியுள்ளது. விசில் போடு என்ற பெயருடன் உருவாகியுள்ள இந்த பாடலை, நடிகர் விஜய் தான் பாடியுள்ளார்.

பாடலின் முதல் வரியில்,

“Party ( அரசியல் கட்சி ) ஒன்னு தொடங்கட்டுமா..?
அதிரடி கிளப்பட்டுமா..?

Campaign-ஆ ( பிரச்சாரம் ) தான் தொறக்கட்டுமா..?
மைக்க கையில் பிடிக்கட்டுமா..? ” என்று குறிப்பிட்டுவிட்டு,

அடுத்த வரியில், அது Campaign இல்லை Champagne என்று மாற்றிவிட்டு, விஜய் ரகளை செய்வது போல், இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ, இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

More in சினிமா

To Top