“தல.. தல” என்று கத்திய ரசிகர்கள் – கடுப்பான விஜய்சேதுபதி!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கலந்துக் கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, பல்வேறு தரப்பட்ட விஷயங்கள் குறித்து பேசிய அவர், போதை பழக்கத்திற்கு அடிமை ஆக வேண்டாம் என்றும், அது ஒரு தீய பழக்கம் என்றும் தெரிவித்தார்.

மேலும், நானும் மது அருந்துவேன். எனக்கும் நிறைய பேர் அறிவுரை வழங்கினார்கள். ஆனால், என்னால் அதில் இருந்து விலக முடியவில்லை. எனவே, நீங்கள் அந்த பழக்கத்தில் மூழ்கி, வாழ்க்கையை கெடுத்துவிடாதீர்கள் என்று தெரிவித்தார்.

பின்னர், மாணவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது குறித்து பேசிய விஜய்சேதுபதி, Social Media-க்கள் உங்களது நேரத்தை திருடுகின்றன. அவற்றை மறந்து, அதில் நீங்கள் சண்டை போடுவதை நிறுத்துங்கள். இவ்வாறு நீங்கள் சோசியல் மீடியாவை பயன்படுத்துவதன் மூலம், அதன் வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது. இதனால், உங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் என்று தெரிவித்தார்.

மேலும், திருக்குறளை மேற்கோள் காட்டி அவர் பேசியபோது, தல தல என்று மாணவர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதனால் கடுப்பான அவர், இப்போ நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஏன் தலன்னு கத்திட்டு இருக்கீங்க என கோபத்துடன் மேடையிலேயே கத்தினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.