விக்ரம் உடன் ஒன்றாக குளித்த பா.ரஞ்சித்!

விக்ரம் மற்றும் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் ஷீட்டிங், ஒகேனக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நடிகர் விக்ரம், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விக்ரம், பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர், ஒகேனக்கல் ஆற்றில் குளித்துள்ளனர்.

மேலும், இதற்கு கேப்ஷன் வழங்கிய அவர், ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு நடைபெற்றது. கடினமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. வா.. வா.. என்று தண்ணீர் அழைத்ததும், ஒரே குதியாக குதித்துவிட்டேன்.. என்று சுவாரசியமாக பதிவிட்டுள்ளார்.