விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். SU அருண்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் 27-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் விக்ரம் கலந்துக் கொண்டு, பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும், வீர தீர சூரன் ரிலீஸ் ஆகும் அதே நாளில் வெளியாகும் எம்புரான் திரைப்படத்திற்கும், அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விக்ரம், “மலையாளத்தில் சாதனை படைக்கும், முதல் பான் இந்தியன் திரைப்படமாக எம்புரான் இருக்கும்” என்றும், “தனுஷை போல, பிரித்விராஜ்-ம் இயக்குநராக மாறியது அதிர்ச்சியாக இருந்தது” என்றும் கூறியுள்ளார்.