ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமை தொடர்பு கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக லைகா நிறுவனம் விக்ரமுக்கு பெரிய தொகை கொடுக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. படத்தில் விக்ரமுக்கு வலுவான கதாபாத்திரம் இருப்பதால் அவர் கண்டிப்பாக ஒப்புகொள்வார் என கூறப்படுகிறது.