விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முதல் சுற்றில் திமுக முன்னிலை!

முதல் சுற்று நிலவரம்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி மறைவைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து, ஜூன் 14-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, ஜூன் 24-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. ஜூன் 26-ஆம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

திமுக சார்பில் அந்தக் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணி மாநிலச் செயலர் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னயர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு (ஜூலை 13) வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், பிற்பகர் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தபால் வாக்குகளில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம்

1 வது சுற்று முன்னிலை விபரம்

திமுக:- 5564

பாமக:- 2894

நாதக:- 303

2670 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார்.

RELATED ARTICLES

Recent News