மின்சாரம் தாக்கியதில் கிராம ஊராட்சி ஊழியர் பலி !!!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுக்குழி, கல்லாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 54). இவர்,கண்ணுக்குழி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார் . நேற்று இரவு,அவர் வீட்டின் அருகே உள்ள கம்பி வேலியில் உயர் அழுத்த‌ மின் கம்பி காற்றில் அறுந்து விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் தீயை அணைக்கச் சென்ற பழனிச்சாமி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் பசு மாடு ஒன்றும் இறந்தது.

இச்சம்பவம் குறித்து வளநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை மருங்காபுரி வட்டாட்சியர் செல்வசுந்தரி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News