அருவி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் மதன். இந்த படத்திற்கு பிறகு, கர்ணன், அயலி, துணிவு, அயோத்தி, பம்பர், மாவீரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இவர் தற்போது இயக்குநராக புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். ஹரிஷ் உத்தமன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், ஷீலா ராஜ்குமார், ஆழியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா உட்பட பலர் நடித்துள்ளனர்.
நூடுல்ஸ் என்று இந்த படத்திற்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து மதன் பேசும்போது, நூடுல்ஸ் என்ற உணவுப் பொருள் 2 நிமிடங்களில் தயார் செய்துவிட முடியும்.
இப்படி 2 நிமிடங்களில் நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை மையமாக வைத்து தான், இந்த படத்தின் கதை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.