அஜித்-விஜயுடன் மோதும் விமல்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும், வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் நேரடியாக மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித், விஜய்க்கு போட்டியாக விமல் நடித்திருக்கும் படமும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

வரும் பொங்கலுக்கு அஜித், விஜய் படங்களே மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விமல் படமும் வெளியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.