பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியில், கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வருபவர் நடிகை வினுஷா.
இவரது நடிப்பு பலருக்கும் பிடித்துவிட்டதால், சின்னத்திரையில் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்நிலையில், நடிகை வினுஷா, தமிழ் திரைப்படம் ஒன்றில், கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
லோகேஷ் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, “எண் 4“ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் வினுஷா நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சீரியலில் இருந்து சினிமாவில் கதாநாயகியாக அவர் மாறியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.