மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு!

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

தற்போது இந்திய முழுவதும் பல கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் மக்களவைத் தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.

அப்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 22 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடந்தது.

இதனைதொடர்ந்து நேற்று (ஏப்.26) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஒரு மக்களவைத் தொகுதியில் நடைபெற்றது.

இந்நிலையில், நரன்சேனா பகுதியில் நேற்று (ஏப்.26) நள்ளிரவு குக்கி பழங்குடிகள் நடத்திய வன்முறை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் இருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News