மணிப்பூரில் 13 நாள்களுக்குப் பிறகு மீண்டும் புதிய வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் குகி சமூகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூரின் மக்கள் தொகையில் 53% மைத்தேயி இனத்தையும், 40% பேர் மலைகளில் வசிக்கும் நாகா மற்றும் குகி பழங்குயினத்தையும் சேர்ந்தவர்கள். பள்ளத்தாக்கு பதிகளில் வசிக்கும் மைத்தேயி இனைத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து கோரியதையடுத்து அவர்களுக்கும் நாகா உள்ளிட்ட பழங்குடியினத்தவர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு மணிப்பூரில் அமைதி திரும்பிக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில் 13 நாள்களுக்குப் பிறகு அங்கு மீண்டும் வன்முறை வெடித்து உள்ளது. இன்று காலை உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் கிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அங்கு மூன்று இளைஞர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லிட்டான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்த கிராமத்தில் இன்று அதிகாலையில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கின்றது.