Connect with us

Raj News Tamil

தண்ணீரில் வீசப்பட்ட EVM மிஷின்…மேற்கு வங்கத்தில் வன்முறை

தேர்தல் 2024

தண்ணீரில் வீசப்பட்ட EVM மிஷின்…மேற்கு வங்கத்தில் வன்முறை

மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், குல்தாய் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 40, 41-ல், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டன.

இதேபோல், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. அப்போது அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தேர்தல் 2024

To Top