Connect with us

Raj News Tamil

Mom will be mom.. பார்வையாளர்கள் மீது கல்லெறிந்த குட்டி.. அதட்டிய தாய்.. வைரல் வீடியோ..

Trending

Mom will be mom.. பார்வையாளர்கள் மீது கல்லெறிந்த குட்டி.. அதட்டிய தாய்.. வைரல் வீடியோ..

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது, மிகப்பெரிய டாபிக். குழந்தைகள் நல மருத்துவர்கள் முதல் மனநல மருத்துவர்கள் வரை, பலரும், அதற்கான வழிமுறைகளை, பெற்றோர்களுக்கு வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு சிறந்த குழந்தை வளர்ப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, தாய் மனிதக்குரங்கு ஒன்று, மனிதர்களுக்கு சிறப்பாக எடுத்துரைத்துள்ளது. அதாவது, Nature is Amazing என்ற எக்ஸ் பக்கத்தில், தற்போது வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், வனவிலங்கு பூங்கா ஒன்றிற்கு, பார்வையாளர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த மனிதக் குரங்குகளின் குடும்பத்தை அவர்கள் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில், குட்டி குரங்குகளில் ஒன்று, அங்கிருந்த பார்வையாளர்கள் மீது கல்லெறித்து விளையாடியுள்ளது. முதலில் இதனை கவனிக்காத தாய் குரங்கு, குட்டியின் செயலை பின்னர் கண்டுக் கொண்டது.

இதையடுத்து, அங்கிருந்த கிளையை எடுத்து, குட்டியின் செயலுக்கு அடித்து, அதட்டியது. இதுதொடர்பான வீடியோ, கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே வெளியாகியிருந்தாலும், தற்போதுள்ள சூழ்நிலைக்கும் தேவைப்படும் என்பதால், இப்போதும் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், குழந்தை வளர்ப்பு என்பது இப்படி இருக்க வேண்டும் என்றும், குழந்தைகள் ஒழுக்கத்தை போதிக்க வேண்டும் என்றும், பலர் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

More in Trending

To Top