திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், நெல்லை டவுன், பாளையங்கோட்டை போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நாய்களின் தொல்லை நாள்தோறும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகரின் 36வது வார்டில் நாய் தொல்லையைக் கட்டுப்படுத்தாத மாநகராட்சியைக் கண்டிக்கும் வகையில், சமூக ஆர்வலர் சிராஜ் என்பவர் நகைச்சுவையாக போஸ்டர் ஒன்றை அப்பகுதியில் ஒட்டியுள்ளார்.

அந்த போஸ்ட்டரில் நாய்களின் புகைப்படங்களோடு, அவற்றின் பெயர் (புனைபெயர்), வயது, குணம் மற்றும் அந்த நாய்களால் கடிப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கற்பனையாக குறிப்பிட்டு இருந்தது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.