நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 70 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 50வது சதத்தை நிறைவு செய்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்தார்.
இந்திய பிரதமர் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுக்களை கோலிக்கு தெரிவிக்க, அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா சமூக வலைத்தளம் மூலம் தனது தெரிவித்துள்ளார்.
அதில் “கடவுள் ஒரு சிறந்த கதாசிரியர், உன் காதலியாக வாழ ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி. உன்னுடைய ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் பார்த்து வருகிறேன். இந்த விளையாட்டின் மீதுள்ள உனது நேர்மையே இந்த வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. நிஜமாகவே நீங்கள் கடவுளின் குழந்தை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி குறித்து அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட இந்த பதிவு தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.