ஒருநாள் கிரிக்கெட் போட்டி : 44வது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி..!

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அபாரமாக ஆடி சதமடித்தார். அவரை தொடர்ந்து விராட் கோலியும் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் விராட் கோலி 44வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி ரன்களை குவித்தார். தொடர்ந்து களத்தில் நின்று விளையாடிய விராட் கோலி மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 44 ஆவது சதத்தை இன்று அடித்தார்.

இது விராட் கோலிக்கு ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் இது 72 ஆவது சதமாகும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தி இரண்டாம் இடத்திற்கு விராட் கோலி முன்னேறி உள்ளார்.