இந்தியாவின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி சச்சினின் 49 சதத்தினை சமீபத்தில் சமன் செய்தார்.
இந்நிலையில் உலகக் கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது இவருடைய 71வது அரைசதமாகும்.
இதன்மூலம் உலகக் கோப்பை தொடரின் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 591 ரன்கள் எடுத்த தென்னப்பிரிக்காவின் டி காக்கினை பின்னுக்குத்தள்ளிய விராட் கோலி 594 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்த உலக கோப்பை தொடரில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வரும் விராட்கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.