விராட் கோலி மிரட்டல் சதம்: வங்கதேசத்தை வென்றது இந்தியா!

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 17-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை சாய்த்தது.

வங்காளதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டான்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

டான்சித் ஹசன் 51 ரன்களும், லிட்டன் தாஸ் 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் வந்த முஷ்பிகுர் ரஹிம் (38) மற்றும் மகமதுல்லா (36) ஆகியோரின் பங்களிப்புடன் வங்காள அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து இந்தியா அணி 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் குவித்தது.

ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அரைசதம் அடித்து 53 ரன்களில் வெளியேறினார். ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்களில் வெளியேற, விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

விராட் கோலி சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்ததுடன், ஆட்டத்தையும் வெற்றிகரமாக முடித்து வைத்தார். கே.எல்.ராகுல் ரன்களும் எடுத்து கடைசி வரையில் களத்தில் இருந்தனர். இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன், இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்துள்ளது.

RELATED ARTICLES

Recent News