பட்டாசு ஆலை விபத்து.. 6 பேர் பலி.. ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள அப்பைநாயக்கன்பட்டியில், பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில், இன்று மிகப்பெரிய அளவில், வெடி விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், பணியாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.

இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், வேதிப்பொருட்களை கலக்கும்போது, இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும், முழு விசாரணைக்கு பிறகே, முழு தகவலும் தெரியவரும் என்றும், தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News