மோடியை புகழ்ந்த விஷால்! பங்கமாய் கலாய்த்த முரட்டு வில்லன்!

நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், “காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறி வந்தது. மேலும், விஷால் பாஜக கட்சியில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பலர் பேசி வந்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தது குறித்து நடிகர் பிரகாஷ் அவரின் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “ஷாட் ஓகே… அடுத்து” என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.