விஷால் சொன்ன தளபதி 67 அப்டேட்!

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 67 திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தில், விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஷால், பிரபல Youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தளபதி 67 படத்தில் நடிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

பல்வேறு படங்களில் கமிட் ஆகியுள்ளதால், இந்த படத்திற்காக கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தளபதியை வைத்து, நான் ஒரு படத்தை இயக்குவேன்.

அந்த படத்தில், நிச்சயம் நானே வில்லனாக நடிப்பேன் என்று விஷால் கூறியுள்ளார். இந்த தகவல், விஜய் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News