Connect with us

Raj News Tamil

அரசியல் வருகை.. அதிரடியாக சொன்ன விஷால்!

சினிமா

அரசியல் வருகை.. அதிரடியாக சொன்ன விஷால்!

நடிகர் விஜய் கடந்த 2-ஆம் தேதி அன்று, தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய கட்சியை ஆரம்பித்தார். இவரது இந்த முடிவுக்கு, எதிர்ப்புகளும், ஆதரவு குரல்களும் ஒரு சேர எழுந்தது.

இந்நிலையில், நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய நற்பனி இயக்கம் மூலம், பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருவதாகவும், அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்தது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

ஆனால், எதிர்காலத்தில் இயற்கை என்னை ஏதாவது முடிவு எடுக்க வைத்தால், மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், அரசியல் வருகையை தான் அவர் சூசகமாக கூறியுள்ளார் என்று தெரிவித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top