மிஷ்கின் செய்த துரோகம்… மன்னிக்கவே முடியாது.. – விஷால் விளாசல்

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில், விஷால், சுனைனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லத்தி. வரும் வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், பட புரோமோஷனுக்காக, விஷால் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில், படம் தொடர்பாகவும், விஷாலின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து வந்த அவரிடம், மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சனை குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த விஷால், மிஷ்கின் கூப்பிட்டா, கண்டிப்பா அவர் ஆபீஸுக்கு போவேன். அதுல எனக்கு எந்தப்பிரச்னையுமில்லை. அவரோட படங்களின் ரசிகன் நான். அவர் சிறந்தஇயக்குநர். ஆனா, ஒரு தயாரிப்பாளரா என்னால அவரை மன்னிக்கவே முடியாது. எனக்கு நடந்த அந்தத் துரோகத்தை மறக்கவே முடியாது என்று விஷால் கூறியுள்ளார்.