கௌதம் மேனன் இயக்கத்தில், விஜய் நடிப்பில், யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற பெயரில், படம் ஒன்று உருவாக இருந்தது. இதற்கான போஸ்டரும், அந்த சமயத்தில் ரிலீஸ் ஆகியிருந்தது.
ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த படம் டேக் ஆஃப் ஆகவில்லை. இவ்வாறு இருக்க, இந்த கதையில், பிரபல ஆக்ஷன் ஹீரோ நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த திரைப்படத்தின் கதையில், தற்போது நடிகர் விஷால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும், இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.