சினிமா
ரஜினி ஏரியாவில் கெத்து காட்டிய அஜித்!
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் ஐஸ்வர்யா, ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில், படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் ரசிகர்களிடம் பேசினார். அப்போது, உங்கள் கிரிக்கெட் அணியின் கோச்சாக யார் இருக்க வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, நடிகர் அஜித்குமார் என்று அவர் பதில் அளித்தார். இதையடுத்து, அங்கிருந்த ரசிகர்கள் பலரும், இடைவிடாமல், தங்களது கரகோஷங்களை எழுப்பினர்.
இந்த வீடியோவை, அஜித் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.