ஆக்‌ஷன் கிங் அர்ஜூனை தூக்கி எறிந்த விஷ்வாக் சென்..!

நடிகர் அர்ஜூன் அவரது, புதிய படத்திற்கு, தெலுங்கு நடிகர் விஷ்வாக் சென்னை ஒப்பந்தம் செய்தார். மேலும் அதில் மகள் ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் இப்படம் கைவிடப்பட்டது. இதனால் அப்செட்டில் இருந்த அர்ஜூன், கோடி ரூபாய் கொடுத்தாலும் விஷ்வாக் சென்னுடன் பணிபுரிய மாட்டேன் என கடுமையான விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய விஷ்வாக் சென், படத்தின் வசனங்கள், பாடல்கள் மற்றும் இசையில் நான் கூறிய கருத்தை கண்டுகொள்ளவில்லை. மேலும் செட்டில் கொஞ்சம் கூட மரியாதை இல்லை என வருத்தப்பட்ட அவர், இப்படத்திற்காக பெற்ற சம்பளம், டாகுமெண்ட் அனைத்தையும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பிவிட்டேன் என பதிலடி கொடுத்துள்ளார்.