விஜே மகேஸ்வரியின் முன்னாள் கணவர் இவரா? வைரல் புகைப்படம்!

தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் விஜே மகேஸ்வரி. இதையடுத்து, சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த இவர், சென்னை -28 படத்தின் 2-ஆம் பாகம், ரைட்டர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மீடியாவில் நுழைந்த ஆரம்ப காலங்களிலேயே திருமணம் செய்துக் கொண்ட இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து செய்தார். தற்போது, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள விஜே மகேஸ்வரி, சக்திவாய்ந்த போட்டியாளராக இருந்து வருகிறார்.

அந்த போட்டியின் இறுதி வரை வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜே மகேஸ்வரியின் முன்னாள் கணவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.