தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் வி.ஜே.ரம்யா. அதன்பிறகு, சினிமாவில் அறிமுகமான இவர், மாஸ்டர், ஆடை உள்ளிட்ட ஒரு சில படங்களில நடிக்கவும் செய்துள்ளார்.
இந்நிலையில், நான் ரெடி தான் பாடலுக்கு, பரதநாட்டியம் ஸ்டைலில் நடனம் ஆடி, வீடியோ ஒன்றை, ரம்யா வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இவர் நடனத்திலும் ஜாதியை புகுத்துகிறார் என்று விமர்சனம் செய்திருந்தனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள ரம்யா, என்னை பற்றி பிறர் எப்படி நினைக்கிறார்கள் என்பது குறித்து நான் கவலைப்பட மாட்டேன். என்னை பற்றி நான் எப்படி நினைக்கிறேன் என்பதே முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.