Connect with us

Raj News Tamil

தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் ஜெலன்ஸ்கி.. பட்டியல் வெளியிட்ட ரஷ்யா! பொங்கியெழுந்த உக்ரைன் அரசு..

உலகம்

தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் ஜெலன்ஸ்கி.. பட்டியல் வெளியிட்ட ரஷ்யா! பொங்கியெழுந்த உக்ரைன் அரசு..

கடந்த 2022-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் இருந்து, தற்போது வரை, ரஷ்யாவுக்கும், உக்ரைன் நாட்டிற்கும் இடையே போர் நிலவி வருகிறது. இந்த போரில், தங்களிடம் உள்ள ஒட்டுமொத்த பலத்தையும் பயன்படுத்தி, உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது.

இதற்கிடையே, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடந்த புதிய போரால், ஒட்டுமொத்த உலகமும், இந்த போர் குறித்தே பேச ஆரம்பித்துவிட்டன. ஆனால், இப்போது வரை, இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்படவில்லை, அது தொடர்ந்துக் கொண்டும் இருக்கிறது.

இந்நிலையில், தேடப்படும் குற்றவாளிகளின் பெயரை, ரஷ்ய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இவர் மட்டுமின்றி, உக்ரைனின் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ, உக்ரைனின் காலாட்படை தளபதி ஒலக்சன்டர் பவ்லியுக் ஆகியோரின் பெயர்களும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து அறிந்த உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், பதிலடி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “எதற்கும் உதாவத ரஷ்யாவின் பட்டியலை போல் அல்லாமல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினை கைது செய்வதற்கு பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டிருப்பது என்பது உண்மை. இந்த உத்தரவு என்பது, 123 நாடுகளில் அமலில் உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யாவின் இந்த செயல் இயலாமையின் வெளிப்பாடு என்றும், கவனத்தை பெறுவதற்காக செய்யப்பட்ட செயல் இது என்றும், அந்த அறிக்கையில், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

More in உலகம்

To Top