வாக்காளர் அட்டை இருக்கு, பூத் சிலிப் இருக்கு, ஆனால் ஓட்டு இல்ல சொல்றாங்க..!

தமிழகம் மற்றும் புதுச்சேரி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 68,321 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7.00 மணி முதல் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், திரைத்துறை பிரபலங்களும் காலை முதலே ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்ய பிரகாஷ், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு உட்பட்ட வாக்காளர் ஆவர்.

இவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க சென்றபோது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சூர்ய பிரகாஷின் ஓட்டு அழிந்துவிட்டது. எனவே நீங்கள் வாக்களிக்க முடியாது என சொன்னதால் வாக்காளர் சூர்ய பிரகாஷ் ஆத்திரமடைந்துள்ளார்.

என் பெயரில் பூத் சிலிப் கொடுத்து விட்டார்கள் உயிரோடு இல்லாத என் அப்பா அம்மா பெயரில் ஓட்டு இருக்கிறது. உயிரோடு இருக்கிற என்னுடைய ஓட்டு மட்டும் எப்படி இல்லாமல் போகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News