மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் வடிவேலு ஆகியோர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் மாமன்னன்.
படத்திற்கான இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேவர் மகன் படம் குறித்து மாறி செல்வராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மாமன்னன் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக தேனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஜாதி மோதல்களை மாமன்னன் திரைப்படம் உருவாக்குகிறது. எனவே அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது.
