ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை திருடர்கள் போல் விமர்சித்த பிரதமர் மோடியை உலக மகா நடிகன் என வன்மையாக கண்டித்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளார்.
அந்த போஸ்டரில் “தமிழ்நாட்டிற்கு வருவான், தமிழ்மொழியின் பெருமையை பேசுவான், திருவள்ளுவரை தெய்வம் என சொல்லுவான், கர்நாடகா போவான், காவிரி பிரச்சனையை தூண்டுவான், ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என சொல்லுவான், உலக மகா நடிகன் அவன் யார்?” என்று அந்த போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது.