வக்பு வாரிய மசோதாவுக்கு ஒப்புதல்!

இசுலாமிய மதம் தொடர்பான பணிகளுக்காக சொத்துக்கள் அர்பணிக்கப்படுவது வக்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த சொத்துகள், வக்பு வாரியத்தின் மூலமாக, நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பதில் உள்ள பிரச்சனைகளை களைவதற்காக, வக்பு வாரிய சட்டம் 1995-ல் திருத்தங்களை மேற்கொண்டு, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு, இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவின் மீது கடந்த 6 மாதங்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 14 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆலோசனையின்போது, தங்களுக்கு வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று, எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News