சென்னையில் பிரபல தனியார் அடுமனையில் (CK BAKERY) கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை கோபாலபுரம் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் யுவராஜ், நேற்று மாலை தனது வீட்டு அருகே உள்ள பிரபல தனியார் அடுமனையில் (CK bakery) தனது குழந்தைக்கும், உறவினர் குழந்தைக்கு டனாட் வகை கேக்குகளை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த டனாட் கேக்களை உண்ட குழந்தைகள் ஹனி மற்றும், அஹானா ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பரிசோதனையில் செய்ததில் உணவுவழி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடந்து, யுவராஜ் வீட்டில் மீதம் இருந்த டனாட் கேக்குகளை சோதித்ததில், அவை கெட்டுப்போனதாகவும், பூரணம் அடைந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அடுமனைக்கு சென்று கேட்டபோது ஊழியர் முறையாக பதிலளிக்காததால், அடுமனை மேலாளரிடம் பேசிய பொழுது அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அடுமனையை சூழ்ந்த நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான டனாட் கேக்குகளை குப்பையில் வீசினர். இச்சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் இந்தப் பிரபல அடுமனையில் நடந்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் மெத்தனமாகவும், தரமற்ற முறையிலும் தயாரித்து வரும் இதுபோன்ற நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.