Connect with us

Raj News Tamil

கமல் – எச்.வினோத் திரைப்படம் எப்போது?

சினிமா

கமல் – எச்.வினோத் திரைப்படம் எப்போது?

கமலின் 233-வது திரைப்படத்தை, இயக்குநர் எச்.வினோத் இயக்க இருப்பதாக, சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

ஆனால், அறிவிப்பு வெளியாகி, பல நாட்கள் ஆகியும், அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்தது. இதனால், இந்த திரைப்படம் டிராப் செய்யப்பட்டதாக, சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதன்படி, இப்படம் கைவிடப்படவில்லை என்றும், தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதாவது, இயக்குநர் எச்.வினோத், தனுஷ், யோகிபாபு, கார்த்தி ஆகியோருடன், தலா ஒரு படங்களை இயக்கி முடித்த பிறகு, மீண்டும் கமல் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top