தஞ்சாவூர் கீழவாசல் கவாஸ்கார தெருவை சேர்ந்த சிவகிரிநாதன் என்பவர் வழக்கம்போல இன்று (டிச.9) காலை துணி துவைப்பதற்காக வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டு இயக்கி போது திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து எரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.