பேருந்தில் பயணித்த பக்தர்கள்.. திடீரென செயலிழந்த பிரேக்.. அச்சத்தில் பக்தர்கள் செய்த செயல்..

பஞ்சாப் மாநிலம் ஓசியார்பூர் பகுதியை சேர்ந்த 40 பேர், அமர்நாத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளனர். பயணத்தை முடித்துவிட்டு, மீண்டும் அமர்நாத்தில் இருந்து ஓசியார்பூர் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலை 44 பகுதி அருகே பேருந்து வந்தபோது, திடீரென பிரேக் செயிழந்து போயுள்ளது. இதனை அறிந்த பக்தர்கள், கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, ராணுவ வீரர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், பேருந்து பள்ளத்தாக்கில் கவிழாமல் தடுத்து நிறுத்தினர். ஆனால், பிரேக் செயலிழந்து போனதால், தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய சிலர், ஓடும் பேருந்தில் இருந்து திடீரென குதித்தனர். இதன்காரணமாக, 6 ஆண்களும், 3 பெண்களும், ஒரு குழந்தையும் காயம் அடைந்தனர். இவர்களுக்கு, தற்போது முதலுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல், கடந்த மே மாதமும், உத்தரபிரதேசத்தில் இருந்து ஹரியானா பகுதிக்கு, 80 பேர் பயணம் மேற்கொண்டனர். அப்போதும், பிரேக் செயலிழந்து போனதால், அது அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

RELATED ARTICLES

Recent News