ரெனால்டோவிற்கு மனைவி தந்த சர்ப்ரைஸ்! வைரலாகும் வீடியோ!

கால்பந்து வீரர்களில் மிகவும் முக்கியமானவர் ரெனால்டோ. போர்ச்சுக்கல் அணியை சேர்ந்த இவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 2022-ஆம் ஆண்டுக்கான FIFA கால்பந்து உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வந்தார்.

ஆனால், மெராக்கோ அணியுடன் நடந்த காலிறுதி போட்டியில், ஒரு கோல் கூட அடிக்க முடியாமல், போர்ச்சுக்கல் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதன்காரணமாக, ரெனால்டோ கண்ணீரோடு மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், ரெனால்டோவின் துணைவியர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரெனால்டோவிற்கு, ரூபாய் 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை, கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “உலகக்கோப்பையையும் வென்றிருந்தால், இந்த பரிசு ரெனால்டோவிற்கு கூடுதல் மகிழ்ச்சியை வழங்கியிருக்கும்” என்று கூறி வருகின்றனர்.