Connect with us

Raj News Tamil

பாலியல் குற்றவாளி.. கைது செய்ய மருத்துவமனையின் உள்ளே-யே வாகனத்தை இயக்கிய போலீஸ்..

இந்தியா

பாலியல் குற்றவாளி.. கைது செய்ய மருத்துவமனையின் உள்ளே-யே வாகனத்தை இயக்கிய போலீஸ்..

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்களின் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சதீஷ் குமார்.

இவர் அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சில ஆபாச வீடியோக்களையும், அந்த மருத்துவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவம், சக மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த அவர்கள், மருத்துவமனை Dean-ன் அலுவலகம் முன்பு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சதீஷ் குமாரை பணிநீக்கம் செய்வது மட்டுமின்றி, கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கூறி வந்தனர்.

இந்நிலையில், சதீஷ் குமாரை கைது செய்வதற்கு, காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

ஆனால், மருத்துவர்கள் கூட்டமாக போராட்டம் நடத்தி வந்ததால், அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. இதனால், அதிரடி முடிவு எடுத்த அவர்கள், தங்களது பேட்ரோல் வாகனத்தை, மருத்துவமனையின் 6-வது மாடிக்கே ஓட்டிச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த சதீஷ் குமாரை, அவர்கள் கைது செய்தனர். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in இந்தியா

To Top