Connect with us

Raj News Tamil

“நீ எனக்கு சொல்லி தரியா?” – மத்திய அமைச்சரிடம் கோபமாக பேசிய சுயேட்சை எம்.பி!

இந்தியா

“நீ எனக்கு சொல்லி தரியா?” – மத்திய அமைச்சரிடம் கோபமாக பேசிய சுயேட்சை எம்.பி!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வான நீட், சமீபத்தில் நடத்தப்பட்டது. ஆனால், இந்த தேர்வில், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதனால், ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இவ்வாறு இந்த விவகாரம் பெரும் பேசு பொருளாகி வந்த நிலையில், பீகார் மாநில சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ், நேற்றுமுன் தினம் உறுதி மொழி ஏற்றார்.

அப்போது, அவர் பேசும்போது, மீண்டும் நீட் தேர்வு நடத்துதல், பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குதல் குறித்த கோரிக்கைகைளை முன்வைத்தார்.

அந்த சமயத்தில், நாடாளுமன்ற விவாகரங்கள் துறையின் அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பப்பு யாதவை குறுக்கிட்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பப்பு யாதவ், 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி நான்., நீ எனக்கு சொல்லி தரியா? என்று பேசினார்.

மேலும், கருணையின் அடிப்படையில் தான் கிரண் ரிஜிஜூ வெற்றி பெற்றார் என்றும், தான் சுயேட்சை வேட்பாளராக 4-வது முறையாக நாடாளுமன்றம் வந்திருக்கிறேன் என்றும், அவர் தெரிவித்தார். இவரது இந்த பேச்சால், நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in இந்தியா

To Top