உயர்கிறது குடிநீர் கட்டணம்…சென்னை மக்கள் ஷாக்..!

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் நாள்தோறும் சுமார் 100 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2019 -20 ஆம் ஆண்டு வீடுகளுக்கு 5 சதவிகிதமும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதமும் என குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயத்தப்படவில்லை. இதன் காரணமாக பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2023 – 24ஆம் நிதியாண்டில் வீடுகளுக்கு 5 சதவிகிதமும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதமும் குடிநீர் கட்டணம் உயர்த்த குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.

வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் 80 ரூபாயாக இருந்த கட்டணம் 84 ரூபாயாக உயர்கிறது. தொழில் நிறுவனங்களுக்கு 250 ரூபாயாக இருந்த கட்டணம் 263 ரூபாயாக உயர்கிறது. இதேபோல வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் லாரி குடிநீரைப் பொறுத்தவரை 6 ஆயிரம் லிட்டர் 475 ரூபாயில் இருந்து 499 ரூபாயாகவும், 9 ஆயிரம் லிட்டர் குடிநீர் 700 இல் இருந்து 735 ரூபாயாகவும் உயர்கிறது.

வணிக நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் 6 ஆயிரம் லிட்டர் குடிநீர் 700 ரூபாயில் இருந்து 770 ரூபாயாகவும், 9 ஆயிரம் லிட்டர் குடிநீர் 1,000 ரூபாயில் இருந்து 1,100 ரூபாயாகவும் உயர்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரி கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News