வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்னிலை பெறத் தொடங்கினார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் தொடர்ந்து முன்னேறி 5 லட்சம் வாக்குகளைக் கடந்து முன்னிலையில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஆளும் இடது முன்னணி வேட்பாளர் சத்யன் மொகேரியும் மூன்றாவது இடத்தில் பா.ஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸும் உள்ளனர்.
2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை விட பிரியங்கா காந்தி அதிகம் பெற்று சாதனை படைப்பாரா என்று எதிர்பார்ப்பு கட்சியினரிடையே மேலோங்கி இருக்கிறது.