வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 316-ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெருமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று மண்ணால் மூடப்பட்டுள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேற்று 3-வது நாளாக மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்றது. இங்கு தோண்ட தோண்ட உடல்கள் கிடைத்து வருகின்றன. உயிரிழந்தோர் எண்ணிக்கை 316-ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் இதுவரை 100 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. (அக.1) நேற்று காலை வரை 256 உடல்கள் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.